மணல் லாரி உரிமையாளர்கள் கவனத்திற்கு! வாகன ஆவணங்கள் சரிபார்ப்பு சிறப்பு முகாம்

தமிழ்நாடு அரசின் மணல் இணைய சேவையில் (TNSand) மேற்கொள்ளப்படும் வாகனப் பதிவுகளில் எழும் முறைகேடான பதிவுகளை தவிர்க்கும் பொருட்டு வாகன ஆவணங்களை சரிபார்தலுக்கான சிறப்பு முகாம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 7.8.2017 முதல் 11.8.2017 வரை காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை வட்டார போக்குவரத்து அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் இந்த நாட்களில் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் பழைய கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. 

வாகன உரிமையாளர்கள் www.tnsand.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் வாகனத்தின் நடப்பில் உள்ள அனைத்து ஆவணங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் படிவத்துடன் முகாமிற்கு வரவேண்டும். பதிவேற்றிய ஆவணங்களுக்கான அசல் சான்றுகளை அவற்றுக்கான நகல்களுடன் சிறப்பு முகாமில் காண்பித்து சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. இம்முகாமிற்கு வாகனங்களை கொண்டு வர வேண்டாம். மேலும், தவறான ஆவணங்கள் கொண்ட வாகனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவும் தெரிவிதுக்கொள்ளபடுகிறது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...