அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லாவை கடத்த முயற்சித்த சம்பத்தின் பின்னணியில் வெடிகுண்டு வழக்கில் சிறையில் உள்ள அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் பாருக் கடந்த மார்ச் மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மத அடிப்படைவாதிகள் சதாம் உசேன், அகரம் ஜிந்தா, முனாப், அன்சாத், ஜாபர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாருக்கினை கொலை செய்த 6 பேரின் குடும்பத்தினருக்கு உதவ அனைத்து ஜமாத்துகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனாயத்துல்லாவை பணம் கேட்டு கடத்திச் செல்ல கொலையாளிகளின் நண்பர்கள் திட்டமிட்டனர்.
இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் கடந்த மே மாதம் இனாயத்துல்லாவை கடத்த முயன்றதாக 8 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, இனாயத்துல்லா கடத்தல் முயற்சி வழக்கினை உக்கடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் பெங்களூர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி, ஜுல்பிக்கர் அலி, அஸ்கர்அலி ஆகியோர் மூளையாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மூவருக்கும் கடந்த 18-ம் தேதி கோவை காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இந்நிலையில் இன்று கிச்சான்புகாரி உள்ளிட்ட மூவரும் கோவை நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மூவரும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நாளை காலை துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாகாப்புடன் காவல்துறை வாகனத்தில் பெங்களூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட உள்ளனர் .பாரூக் கொலையில் ஈடுபட்டவர்கள் கொலை சம்பவத்திற்கு முதல் நாள் பெங்களூர் சிறைக்கு சென்று கிச்சான் புகாரியை சந்தித்து இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே பாரூக் கொலை வழக்கிலும் அல் உம்மா இயக்கத்தின் கிச்சன் புகாரி உள்ளிட்ட மூவரும் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.