நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியை சேர்ந்த சீனிவசன் மகன் மணிகண்டன் (22) என்பவரும், உதகை - மைசூர் ரோடு பகுதியை சேர்ந்த அகமது என்பவரின் மகள் வாஜிதா ஆகிய இருவரும் கடந்த நான்கு வருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.
மணமகன் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி போத்தனூர் பூராண்டம்மன் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டு, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.