நடிகர் தலைவாசல் விஜய்க்கு சொந்தமாக கோவை துடியலூரை அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் வீடு உள்ளது. இந்த வீட்டில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (27). ‘லிப்ட்’ தயாரித்து நடத்தி வரும் இவர் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் தனது நிறுவனத்திற்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை கதவை உடைத்து உள்ளே சென்றனர். மேலும், அலமாரியில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5 சவரன் எடையுள்ள தங்க சங்கிலி மற்றும் மோதிரங்களை கொள்ளையடித்து சென்றனர்.
நிறுவனத்திலிருந்து வீடு திரும்பிய போது இக்கொள்ளை சம்பவம் நடந்தது ராஜேந்திரனுக்கு தெரிவந்துள்ளது. தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து 2 கைரேகைகள் கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.