பல்வேறு வடிவங்களில் படாதபாடுபடுத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகள்..!

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இதில், கோவையில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.



அதனைத்தொடர்ந்து, மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மூலம் வருவாய் இழப்பு ஏற்படாமல் இருக்க மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கடைகளை நிறுவியது டாஸ்மாக் நிர்வாகம். இதற்காக, மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டும் அடக்குமுறை தலையோங்கி குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் காலூன்றின.

இதனிடையே, பல பகுதிகளில் முறைகேடாக மதுபானங்களை விற்பனை செய்து வருவது அன்றாட செய்தியாகி வருகிறது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கோவை மதுக்கரை பகுதியில் இதுபோன்று முறைகேடாக நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடையின் பின்புற வாசல் வழியாக மதுபானங்களை விற்பதும், அந்தப் பகுதியில் பல தனிமனிதர்கள் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்துவருவதும் நமது சிம்ப்ளிசிட்டி வாயிலாக செய்தி வெளியானது. அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இதுபோன்ற குற்றச் செயல்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் குடியிருப்பும், போக்குவரத்து நெரிசலும் நிறைந்த சாய்பாபா காலனி பகுதியிலும் இதுபோன்ற முறையற்ற மதுபானம் விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.



சாய்பாபா காலனி, என்எஸ்ஆர் சாலை அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அண்ணப்பூர்ணா பேருந்து நிறுத்தம், என்எஸ்ஆர் சாலையில் செயல்பட்டு வரும் இந்தக் கடைக்கு மாலை நேரத்தில் அதிகளவிலான குடிமகன்கள் படையெடுத்து வருவதால் அந்த சாலையினை பெண்கள், பள்ளி குழந்தைகள் பயன்படுத்துவது கேள்விக்குறியாகியுள்ளது. 

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த கடையினை அகற்றி, சாய்பாபா காலனி பகுதியில் முறையற்று நடைபெற்று வரும் மதுபான விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...