தமிழகத்தில் கலவரம் நடக்க வாய்ப்புள்ளது என்றே கூறினேன்- பொன்.ராதா கிருஷ்ணன்


இந்து இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் தாக்கப்பட்டால் காவல்துறை நடவடிக்கை போதுமானதாக இல்லை என்ற உணர்வு தொண்டர்களிடையே மேலோங்கி வருகிறது. தமிழகத்தில் கலவரம் நடக்கும் என நான் கூறவில்லை, கலவரம் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்றே கூறினேன் என கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கொடநாடு எஸ்டேட்டில் நடக்கும் சம்பவங்கள் மர்மமாக இருப்பதால் அது குறித்த சிறப்பு விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் இந்து மத தலைவர்கள் தாக்கப்படுவதால், கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மட்டுமே கூறினேன். கலவரம் ஏற்படுத்த சொல்லவில்லை. 

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என கூறி பாஜக-வினர் தமிழகம் முழுவதும் பணம் வசூலிப்பது சரியா என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, தனது ஊரிலேயே தனது பெயரை சொல்லி மோசடிகள் நடந்துள்ளது. உண்மையான பாஜக தொண்டன் இது போன்ற மோசடிகளில் ஈடுபட மாட்டான் என்று கூறினார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு அடக்குமுறை சட்டம் கொண்டு வருவது அந்நாட்டு அரசியலுக்கு சரியாக வரும். மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அனுக வேண்டும் என பிரதமர் இலங்கையை வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சட்டம் இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது. நமது தமிழக மீனவர்களை இந்த சட்டம் பாதிக்காது. 

இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் இருக்க விரும்புகிறது. எதிர்க்கும் நாடுகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. பண்டித் தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு கட்சியை வளர்க்க பாஜக-வினர் நாடு முழுவது சுற்றுப்பயணம் மேற்கொள்கின்னர். அதன் ஒரு பகுதியாக இன்று நீலகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். 

தமிழகத்தில் 11 ஆயிரம் பேர் கட்சி வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மாபெரும் மாற்றம் உருவாகும் என நான் நம்புகிறேன். 60 சதவிகிதம் சுற்றுலா தளங்களில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை மேம்பாடு செய்ய வேண்டும். அதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்ஹப அவசியம். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மக்களுக்கு தொடர்ந்து சந்தேகம் ஏற்படுவது அரசுக்கு நல்லது இல்லை. பெரிய சந்தேகத்திகுரிய இடமாக மாறி வரும் கொடநாடு விவகாரம் குறித்து விளக்கம் கொடுக்கும் வகையில் விசாரணை துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...