கோவையில் நடமாடும் புத்தகக் கண்காட்சி துவக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில் நடமாடும் புத்தகக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று தொடங்கிவைத்தார்.



இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் மைய நூலகம் - 1, கிளை நூலகம் - 90, ஊர்புற நூலகம் - 100, பகுதி நேர நூலகம் - 53, நடமாடும் நூலகம் - 3 என மொத்தம் 247 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணாக்கர்கள், மற்றும் பொதுமக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களின் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் சார்பில் நடமாடும் புத்தகக் கண்காட்சியானது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று தொடங்கி  நெ.10.முத்தூர், கோவிந்தாபுரம், வடக்கு நல்லி கவுண்டன்பாளையம், ஆதியூர், சென்னியூர், நாராயண செட்டிபாளையம், கூ+லக்கல், கொல்லம்பாளையம், கொண்டம்பட்டி, கோதவாடி, எம்.ஏ.கவுண்டன்பாளையம், கல்லாங்கரை, தேவனாம்பாளையம், கோவில்பாளையம், சேரன்நகர், ஜமீன் காளியாபுரம், பட்டணம், நாகமநாயக்கன்பாளையம், பீடம்பள்ளி, இ.பி.காலனி, அப்பநாயக்கனபட்டி புதூர், கலங்கல், திருமலையாம்பாளையம், தெப்பக்குளத்துப்பாறை, குமிட்டிபதி, மாஸ்திக்கவுண்டன்பதி, குட்டிக்கவுண்டன்பதி, நாச்சிபாளைம், அரிசிபாளையம், சீராபாளையம், புத்தூர், மத்வராயபுரம், சந்தேகவுண்டன்பாளையம், குப்பனூர், பச்சாப்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு இந்த புத்தக கண்காட்சி வாகனம் செல்கிறது.



கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தக வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், அந்தந்தப் பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளில் தலா ஒரு நாள் இப்புத்தகக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தொவித்தார்.

இந்நிகழச்சியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தேன்மொழி, மாவட்ட நூலக அலுவலர் ந.மணிகண்டன், முதல் நிலை நூலகர் பே.இராஜேந்திரன் நூலக ஆய்வாளர் சக்திவேல் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...