தமிழக தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி கோவை மாவட்டத்தில் சாதாரண உள்ளாட்சித் தேர்தல் 2017 தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இன்று கீழ்க்கண்ட அலுவலகங்களில் வெளியிடப்படவுள்ளது.
உள்ளாட்சி அமைப்பின் பெயர்
மாநகராட்சி:-
- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- மாநகராட்சி அலுவலகம்
- தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தேர்வு செய்யப்படும் பிற இடங்கள்
நகராட்சி:-
- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- நகராட்சிகள் அலுவலகங்கள்
- தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தேர்வு செய்யப்படும் பிற இடங்கள்
பேரூராட்சிகள்:-
- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- பேரூராட்சி அலுவலகங்கள்
- தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தேர்வு செய்யப்படும் பிற இடங்கள்
ஊராட்சி ஒன்றியங்கள்:-
- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
- மாவட்ட ஊராட்சி அலுவலகம்
- ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்
- ஊராட்சி அலுவலகங்கள்
- தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தேர்வு செய்யப்படும் பிற இடங்கள்
மேற்படி சாதாரண உள்ளாட்சித் தேர்தல் 2017 தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்களால் வெளியிடப்படவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.