கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சூர்யகலா. இவர்களுக்கு ஸ்ரீகவுரி என்ற 5 வயது பெண்குழந்தை உள்ளது.
ராமச்சந்திரன் தங்க நகை தொழில் செய்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து தொழில் துவங்கிய ராமச்சந்திரன் நகை செய்வதற்காக தங்க கட்டிகளை வாங்கியுள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் நகை செய்து தரவில்லை என்றும், இதனால், நண்பர்கள் அவருக்கு திருடன் என்று பழி சுமத்தியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் மும்பையில் சிறிது நாட்கள் தங்கியிருந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவை வந்த அவர் மன உளைச்சல் அடைந்தார்.
இந்நிலையில் நேற்று விஷம் குடித்த ராமச்சந்திரன் செல்வபுரம் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்து பலியானார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் செல்வபுரம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.