தடாகம் சாலையில் அதிகளவில் சுற்றித் திரியும் காட்டு யானைகள்- பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் தடாகம் அருகே யானைகள் கொண்ட கூட்டம் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரிவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று இரவு தடாகம் அருகே 15-க்கும் மேற்பட்ட யானைகள் சாலையில் முகாமிட்டன. இதனால் அந்த சாலையை கடக்க முடியாமல் பொது மக்கள் அவதியடைந்தனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறி 15 யானைகள் கொண்ட கூட்டம் தடாகம் பகுதிக்குள் நேற்று மாலை 8 மணி அளவில் நுழைந்தது. தடாகத்தில் உள்ள செங்கல் சூளைகளில் இருந்த தொட்டிகளில் அந்த யானை கூட்டம் தண்ணீரை குடித்தது.

பின்னர் தடாகம் சாலையின் நடுவே மெதுவாக நடந்து சென்ற யானைகளால், ஆனைகட்டி பகுதிக்கு சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு யானைகள் செல்லும் வரை காத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, சுமார், 30 நிமிடங்களுக்குப் பின்னர் அந்த காட்டு யானைக் கூட்டம் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. 

ஒரே நேரந்தில் 15-க்கும் மேற்பட்ட யானைகள் தடாகத்தில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிக்கு வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...