நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு தெளிவாக இருக்கிறது - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு தெளிவாக இருக்கின்றது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவை சி.எஸ்.ஐ திருமண்டல கூட்டுக்கல்விக்குழு சார்பில் சி.எஸ்.ஐ பள்ளிகளில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. கோவை சி.எஸ்.ஐ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வீட்டு வசதி மற்றும் நகர்வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கருப்பண்ணன்  மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய ஊரக தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கல்வி துறையில் தற்போதைய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

அவினாசி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும். மக்களுக்கான தேவைகள் அனைத்தும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு தேவையான அனைத்தும் இந்த ஆட்சியில் செய்து கொடுக்கப்படும்' என்றார்.

இதனைத்தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், முதலமைச்சராக இருந்த போது ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் புதிய கட்டிடங்கள் கட்ட உதவி செய்ய வேண்டும் என்றால் நேரில் சந்திக்க வேண்டும். பின், உடனடியாக அனுமதி வழங்கப்படும். மேலும் வீட்டு வசதி வாரியம் சார்பில் 5 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு 3.16 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சுற்றுசுழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் பேசும் போது, ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாட்களின் போது மரம் நட வேண்டும் என்பதன் மூலம் 3.5 கோடி மரங்கள் நடப்பட்டு உள்ளது. மரம் நட வேண்டும் என்ற எண்ணத்தை மக்களிடம் ஜெயலலிதா ஏற்படுத்தி சென்றுள்ளார்" என்றார்.

இறுதியாக பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு  வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மன அழுத்தம் இல்லாமல் மாணவர்கள் படிக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது. சட்டமன்றம் முடிந்த பின்னர் பல்வேறு அறிவிப்புகளுக்கான அரசாணைகள் வெளியிடப்படும். மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் விதமாக 54000 கேள்வி பதில்கள் கொண்ட வினாத்தாள் கொண்ட புத்தகத்தை தமிழக அரசு வெளியிட உள்ளது. 

கலாச்சாரம், பண்பாடு, தொண்மை மாறாமல் அவற்றை பேணிக் காக்கும் வகையில் கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் இருக்கும். தேசபக்தியுடன் இருக்கும் விதத்தில் மாணவர்களை இந்த அரசு உருவாக்கும். எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதில் இந்த அரசு கவனத்துடன் செயல்படுகிறது. 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கணினி பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த அரசு மக்களுக்கு பொக்கிஷமாக இருக்கும். கல்வித்துறையில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்தும் பரீசிலிக்கப்படும்' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு தெளிவாக இருக்கின்றது. அதே வேளையில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளை சந்திக்கும் விதமாக 54 ஆயிரம் கேள்வி பதில் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட உள்ளது. 

சட்டமன்ற கூட்டம் நிறைவடைவதற்குள் ஏழை எளிய வசதியில்லாதவர்களின் குழந்தைகள் கல்விக்காக ஆச்சரியப்படும் வகையில் புது அறிவிப்புகள் வெளியிடப்படும். 3000 ஸ்மார்ட் பள்ளிகளுக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். மேலும் பகுதி நேர ஆசிரியர்களின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்படும். அரசு பள்ளிகளின் நிலை மாறும் போது அரசு பள்ளியில் சேர்க்க அமைச்சர்களிடம் சிபாரிசுகள் கேட்கவேண்டிய நிலை வரும்.

தனியார் பள்ளி கல்விக் கட்டணம் தொடர்பாக உள்ள குறைபாடுகளை களைவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேள்வித்தாள்கள், வரைபடங்கள் தயாராகி விட்டது. கல்வியாளர்களிடன் ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளது" என்றார்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...