கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் சிறுமுகைப் பகுதியில் உள்ள நீர்நிலைகளை குடிமராமத்து செய்து அதன் மூலம் கிடைக்கபெறும் வண்டல் மண், சவுடு, களிமண் போன்றவைகளை வேளாண் நோக்கத்திற்காகவும், மண்பாண்டம் செய்வதற்காகவும் வீடுகளுக்கு பயன்படுத்திடவும், விலையில்லாமல் பொதுமக்களுக்கு மண் வழங்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவிக்கையில்; கோயம்புத்தூர் மாவட்டத்தில் குளம், ஏரி, கண்மாய், நீர்நிலைகள் ஆகியவற்றில் படிந்துள்ள வண்டல், சவுடு, களிமண்களை விவசாயத்திற்கு பயன்படுத்திட வெட்டி எடுத்திடவும், நீர்நிலைகளை தூர்வாரி குடிமராமத்து பணி செய்திடவும் தமிழ்நாடு அரசு ஆணையிடப்பட்டுள்ளது. இதற்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள 234 குளங்களில் முதற்கட்டமாக 52 குளங்களில் மண் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 13,136 விவசாயிகள் மற்றும் பயனாளிகள் மூலம் 13,258 கன மீட்டர் அளவு மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு ஒரு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு 75 கனமீட்டர் அதாவது 25 டிராகடர் லோடுகளும், புன்செய் நிலத்திற்கு 90 கனமீட்டர் அதாவது 30 டிராக்டர் லோடுகளும், வீட்டு உபயோகத்திற்கு 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டாம் செய்வதற்கு 20 டிராக்டர் லோடுகளும் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. குளங்களில் மண் எடுக்கும்போது, கரைகளை சேதப்படுத்தாமலும், கரைகளை ஒட்டி மண் எடுக்காமலும், கரையின் மதகுகளில் வாகனத்தை இயக்காமலும் குளத்திற்குள் மண் சேமிக்காமலும் மண் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் மூலம் எதிர்காலத்தில் பெறப்படும் மழைநீரை சேகரித்து அதன் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு நீர்நிலைகளை மேம்படுத்தி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயனுள்ளதாக உள்ள தமிழக அரசின் இத்திட்டத்தை பொதுமக்கள், விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி தங்கள் விலைநிலங்களை மேம்படுத்திக்கொள்வதுடன் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுசென்ற குளங்களை சமூக அக்கறையுடன் பணிகளை மேற்கொண்டு நம் எதிர்கால சந்ததியினர்களுக்கு பாதுகாப்பாக ஒப்படைப்பது நமது கடமையாகும்.
மேலும், (2017-2018) நடப்பாண்டிற்கு வறட்சி பகுதிகளான பகுதிகளில் மழைக்காலங்களில் நிலத்தடி நீரை சேமிப்பதற்காகவும். செறிவூட்டுவதற்காகவும், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டங்கள் மூலம் பண்ணை குட்டைகள், தடுப்பணைகள், கசிவுநீர் பாழடைந்த கிணறுகளை சீரமைத்தல், கசிவுநீர் குட்டை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.