தடையை மீறி விற்பனையாகும் போதை பீடா: நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் மெத்தனம்

தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு புகையிலை மற்றும் பான்மசாலா போன்றவை தடை செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, தடையை மீறி இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.

அதன்படி, அவ்வப்போது தடைசெய்யப்பட்ட பான்மசாலா மற்றும் புகையிலை விற்பனை செய்வோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். ஆனால், இந்த பான்மசாலா-வை பயன்படுத்தி தயாரிக்கப்படும் போதை பீடாவினை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருகின்றனர்.



போதை பீடா:-

உண்ட உணவு செரிமானம் அடைவதற்காக, நன்றாக சாப்பிட்ட பின் வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு மற்றும் வெட்டுப்பாக்கு இட்டு அதை நம் முன்னோர்கள் உண்டு வந்தனர். அந்த கலாச்சாரம் சற்றே மாறி வெற்றிலையுடன் ‘குல்கந்த்’ சேர்த்து ‘ஸ்வீட் பீடா’ என்ற பெயரில் இந்த தலைமுறையினர் உண்டுவருகின்றனர்.

இந்நிலையில், அஜீரண கோளாறு ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்பட்டு வந்த வெற்றிலை பல இடங்களில் போதை பொருளாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள பீடா கடைகளில் வெற்றிலையின் மீது அதிக அளவிலான பான்மசாலா மற்றும் போதை வஸ்துகள் தடவப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தேவைக்கு ஏற்ப போதை அளவை அதிகரிக்கும் விதமாக 120, 420, 840 என்று பல்வேறு வகைகளாக விற்பனையாகும் இந்த போதை பீடாக்களை புதிதாக ஒருவர் சுவை பார்த்தால், அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுவார். அந்த அளவிற்கு அதிக அளவிலான போதை பொருட்கள் இதில் சேர்க்கப்படுகிறது.

ஜோர் விற்பனை:-

கோவையின் பல இடங்களில் போதை பீடா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான உக்கடம், ஆர்.எஸ்.புரம் மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போதை பீடா விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த கடைகளில் ஸ்வீட் பீடா மற்றும் ஐஸ் பீடா விற்பதாகக் கூறி தடை செய்யப்பட்ட பான் மசாலாக்கள் மற்றும் போதை வஸ்துகளை பயன்படுத்தி போதை பீடா தயாரிக்கப்படுகிறது.



இவ்வகை பீடாக்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது என்பதை மறந்து சுதந்திரமாக அவற்றை விற்பனை செய்துவருகின்றனர் பீடா கடைக்காரர்கள். இப்பகுதிகளுக்கு வரும் பீடா பிரியர்கள் அதிக போதை தரும் பீடாக்களை வாங்கி சுவைக்கின்றனர். அதோடு, பொது இடங்களில் எச்சில் உமிழ்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இப்படியான போதை பீடாக்களை விற்பனை செய்பவர்கள் மீது அந்த பகுதி காவல் துறையினரோ, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளோ அல்லது NIB என்ற போதை பொருள் விற்பனை கட்டுப்படுத்தும் சிறப்பு அமைப்போ நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், போதை பீடா விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. 

இவ்வகை போதை பீடாக்கள் மாரடைப்பு, வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு கொடிய வியாதிகளை உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...