செய்தியாளர்கள் தங்கள் சித்தாந்தத்தை வெளிப்படுத்த வேண்டாம்: பயிற்சிப்பட்டறையில் பத்திரிகையாளர் வேலுச்சாமி பேச்சு



கோவை பிரஸ் கிளப் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 7-வது பயிற்சிப்பட்டறை இன்று காலை கோவை பிரஸ் க்ளப் அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றது. 

இன்றைய நிகழ்ச்சியில், தினமலர் நாளிதழின் செய்தியாளர் ரா.வேலுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'அரசியல் செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் இளம் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- 



ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகைத் துறையில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை பாதுகாக்க எவ்வித பாதுகாப்பு சட்டமும் நம் நாட்டில் இல்லை. தற்போது, ஒரு சில மாநிலங்கள் மட்டுமே பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சட்டங்களை இயற்றியுள்ளன.

ஒரு அரசியல் தலைவரிடம் கேள்வி கேட்பதற்கு முன் பத்திரிகையாளர்கள் நாட்டு நடப்பு குறித்த புதிய செய்திகளை அறிந்திருக்க வேண்டும். இல்லையேல் சில சங்கடமான சூழல்களை சந்திக்க நேரலாம்.



இன்றய காலகட்டத்தில் கேள்வி என்பது பதிலை பெறுவதற்காக கேட்கப்படுவதில்லை. மாறாக, ஒருவரை சிக்கலில் சிக்க வைப்பதற்காகவே கேட்கப்படுகிறது, இளம் பத்திரிகையாளர்கள் இந்த முறையை கைவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனது கருத்தை முழுமையாக தெரிவிக்கும் உரிமை உள்ளது. அதனால் ஒரு கேள்வி கேட்டபின்னர், அதற்கான முழுமையான பதிலை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கு பின்னரே அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். அனைவருமே ஏதாவது ஒரு சித்தாந்தத்தை சார்ந்தவர்களாக அல்லது ஆதரிப்பவர்களாக இருப்போம். நடுநிலையான பத்திரிகையாளராக பணிபுரிய வேண்டுமென்றால், நமது சித்தாந்தத்தை வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது. அப்படி தெரிவித்தால், இருவித இழப்புகளை நாம் சந்திக்க நேரிடும். ஒன்று, நமது சித்தாந்தத்திற்கு எதிர் சித்தாந்தம் கொண்ட அரசியல் பிரமுகர்கள், நம்மிடம் நெருக்கமாக பழகமாட்டார்கள். அதனால் நம்மை நம்பி உள்ள விஷயங்களை தெரிவிக்காமல் தவிர்த்துவிடுவார்கள். இரண்டாவது இழப்பு, நாம் எதிர்சித்தாந்தம் கொண்டவரைப் பற்றி உண்மையான செய்தி எழுதினால் கூட, அதை நம் கொள்கையை காரணம் காட்டி உண்மைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குவார்கள். அதனால் அனைத்து தரப்பினருடனும் நட்புடன் பழகி செய்திக்கான சோர்ஸ் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியின் முடிவில் இளம் பத்திரிகையாளர்கள் சார்பில் மூத்த பத்திரிகையாளர் வேலுச்சாமிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...