ஓய்வு பெற்ற சப்-கலெக்டர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(60). ஓய்வு பெற்ற சப்-கலெக்டரான இவர் கடந்த 14ம் தேதி கேரளாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு தனது குடும்பத்துடன் சென்றார்.  நிகழ்ச்சி முடிந்த பின்னர், நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரன் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 18 பவுன் மதிப்புள்ள தங்க சங்கிலிகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதை தொடர்ந்து, சந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்படாததால் அருகில் இருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ததில் ஒரு கைரேகை கண்டெடுக்கப்பட்டது.  இந்த கைரேகையை பிற குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றன.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...