கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்தல் அதைக் கொண்டு உரம் தயாரித்தல் போன்ற ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்தது. தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ஸ்வச் சர்வக்ஷன் 2016-ல் கோவை மாநகராட்சி அகில இந்திய அளவில் குப்பைகளை தரம் பிரித்து கையால்வதிலும் மற்றும் அகற்றுவதிலும் தலைசிறந்த மாநகராட்சியாக திகழ்ந்தது.
இந்த படிப்படியான வெற்றிக்குக் காரணம் மாநகராட்சியுடன் இணைந்து செவ்வனே செயல்படும் பல்வேறு சமுதாயக் குழுக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் என்று கூறினால் அது மிகையாகாது. இந்தியாவிலுள்ள நகர்புற உள்ளாட்சியமைப்புகளில் கோவை மாநகரம் திடக்கழிவு மேலாண்மையில் தனி முத்திரை பதித்துள்ளது. இந்தியாவிலுள்ள மாநகராட்சிகளில் மக்கும் குப்பைகளைக் கொண்டு உரம் தயாரிப்பதில் அகில இந்திய அளவில் கோவை மாநகராட்சி இரண்டாம் இடத்திலுள்ளது.
மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை 2016 விதிகளின் படி வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உருவாகும் குப்பைகளை உருவாக்குபவர்களே தரம் பிரித்துத்தர வேண்டும். அதை செய்ய தவறியவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். தூய்மை பாரத இயக்கம் திட்டத்தை செயலாக்கம் வகையில் கோவை மாநகராட்சி கடந்த அனுபவங்களைக் கொண்டு புதிய சிந்தனைகளுடன் 100 சதவீதம் குப்பைகளை தரம் பிரித்தல் சேகரித்தல் ஆகியவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதை மேலும் மெருகேற்றும் வகையில் இத்திட்டத்தை சரிவர செய்வதற்கு ஆயுத்தமாக மக்கும் குப்பைகளை வாரம் தோறும் புதன்கிழமை தவிர்த்து மற்ற ஆறு நாட்கள் சேகரித்தல், மக்காத குப்பைகளை வாரம் தோறும் புதன்கிழமை மட்டும் சேகரித்தல் என்ற திட்டத்தை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அறிவித்தார்.
இத்திட்டத்தின் நோக்கம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தருவதற்கு வசதியாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பச்சை மற்றும் நீல நிற தொட்டிகளை பயன்படுத்தி அல்லது வேறு வகையிலோ தரம் பிரித்து தர வேண்டும். இத்திட்டத்தின் மூலம் மக்கும் குப்பை வாரத்தில் ஆறு நாட்களுக்கும், மக்காத குப்பை புதன் கிழமைகளிலும் சேகரிக்கப்படும். இதன் மூலம் குப்பைகள் தரம் பிரித்தல், சேகரித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவை அறிவியல் ரீதியாக நடத்தப்படும்.
ஆகவே, பொது மக்கள் அனைவரும் இப்புதிய திட்டத்திற்கு ஆதரவளித்து கோவை மாநகரை தூய்மையான மாநகராட்சியாக உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்தார். இத்திட்டம் மிகவிரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது என்பதை தெரிவித்தார்.