மாநகராட்சி பணிகள் குறித்து 68-வது வார்டு பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 68-வது வார்டுக்குட்பட்ட ராமநாதபுரம், பெருமாள் கோவில் வீதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின், பெருமாள் கோவில் வீதியில் வசிக்கும் மக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை அவர் ஆய்வு செய்தார்.



தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடையில் 50 மைக்ரான் அளவிற்கு குறைவாக இருந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளனவா என்று மைக்ரான் மீட்டர் கருவி மூலம் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம், பெருமாள் கோவில் வீதியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி வணிகவளாகத்தையும், ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி பொது கழிப்பிடத்தையும் மற்றும் அப்பகுதியில், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடத்தையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உடன் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) மோகனசுந்தரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...