மோடி விழாவின் இரண்டாவது கட்டம் தமிழ்நாட்டில் நான்கு நிகழ்ச்சிகளுடன் நாளை துவக்கம்

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை ஜூலை முதல் தேதியிலிருந்து துவக்குவது என இலக்கு நிர்ணயித்துள்ள அரசு, அதனோடு கூடவே நேரடி அந்நிய முதலீட்டைக் கவர்ந்திழுப்பதை தடைசெய்யும் இடையூறுகளை அகற்றுவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வர்த்தகத்தை சிரமமின்றி மேற்கொள்வதில் பெரும் முன்னேற்றம் இருப்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பின்னணியில்தான் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் விழாவாக (மோடி விழா) நாடுமுழுவதிலும் கொண்டாடி வருகிறது.

இந்த விழாவின் இரண்டாவது கட்டம் தமிழ்நாட்டில் நான்கு நிகழ்வுகளுடன் நாளை துவங்குகிறது. இதில் முக்கிய நிகழ்வு திருப்பூரில் நடைபெறுகிறது. திருப்பூரைத் தவிர இந்த நிகழ்வுகள் திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய இதர மூன்று இடங்களிலும் நடைபெற உள்ளன.

நாட்டின் நெசவாலைகளின் மையமாக விளங்கும் திருப்பூரில் நடைபெற உள்ள மோடி விழாவில் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். நெசவுத் தொழிலுக்குப் புத்துயிர் ஊட்ட மத்திய அரசால் எடுக்கப்பட்ட முன்முயற்சிகள் இந்த விழாவில் முன்னிலைப்படுத்தப்படும்.

மோடி விழாவின் முன்னறிவிப்பாக, இந்த நிகழ்வு பற்றிய செய்தியை, அதாவது இந்த விழா நடைபெற உள்ள நகர வளாகம் மற்றும் மூன்று நாள் நிகழ்ச்சிகளின் துவக்கம் பற்றிய விவரங்கள் ஆகியவற்றை மாவட்ட மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட வேன் ஒன்று மாவட்டம் முழுவதிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைகளின் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஜூன் 2 ஆம் தேதியன்று சென்னையில் மோடி விழாவின் முதல் கட்டத்தைத் துவக்கி வைத்தார். 

இந்த மூன்று நாள் விழா அனைத்து மாநில தலைநகரங்களிலும் மேலும் நாட்டின் வேறு 300 மையங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது., ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுவரும் முன்முயற்சிகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்கள், அரசு திட்டங்கள் ஆகியவை மட்டுமின்றி கடந்த மூன்றாண்டுகளில் மத்திய அரசின் சாதனைகள் குறித்தும் மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைமையில் செயல்படும் மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நாடு முழுவதிலும் பயணம் செய்து வருகின்றனர்.

அரசின் முயற்சிகள் குறித்த இந்த செய்தியை மக்களிடையே கொண்டு சென்று சேர்ப்பதற்கான திட்டத்தின் முக்கிய அம்சமாக விளங்குவது பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்த மூன்று நாள் மோடி விழா ஆகும். அரசின் முக்கிய பெரும் திட்டங்கள் குறித்த விவரங்களை வழங்கும் கண்காட்சி, மத்திய அரசால் துவக்கப்பட்ட பெரும் கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் ஆகியவை இந்த விழாவின் பகுதியாக அமையும். இந்த மூன்று நாள் நிகழ்வின் மிகவும் வித்தியாசமான அம்சம் என்பது ஜன் கி பாத் எனப்படும் அரசின் செயல்பாடு குறித்த தனது கருத்துக்களை வெளிப்படையாக சாதாரண குடிமக்களும் நேரடியாக பிரதமரிடம் தெரிவிக்கும் ஏற்பாடு ஆகும். மேலும் ஜன் தன் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், பெண் குழந்தைகள் காப்போம்; பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் திட்டம் ஆகிய முக்கிய திட்டங்களை முன்னிலைப்படுத்தும் அரங்குகள் இந்தக் கண்காட்சியில் அமைந்திருக்கும்.

மத்திய அரசின் டிஜிட்டல் வகையிலான முன்முயற்சிக்கு இணங்க, பொத்தானை அழுத்தியதும் அரசினால் துவங்கப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்த திட்ட வாரியான தகவல்கள் இந்தக் கண்காட்சிக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும். அதைப் போன்றே தனிநபர்களின் தேவைக்கு ஏற்ப திட்டவாரியான தகவல்களை வழங்கும் இதற்கென அமைக்கப்பட்டுள்ள தகவல் அரங்குகள் வழங்கும். மற்றொரு புதுமையான கருத்து என்பது பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது. இந்த அரங்கில் வைக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுயர கட் அவுட்டுடன் பார்வையாளர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். பல்வேறு விஷயங்கள் குறித்தும் நிபுணர்கள் வழிகாட்டும் உரையாடல் மேடைகள், பல்வேறு அமைச்சகங்களும் வெளியிட்டுள்ள கைபேசி செயலிகளை தரவிறக்கிக் கொள்ளும் ஏற்பாடு, அதிர்ஷ்டக் குலுக்கல் போன்ற இதர நிகழ்வுகளும் இந்த மூன்று நாள் நிகழ்வில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...