கோவை மாவட்டம், தீத்திபாளையத்திற்கு உட்பட்ட ஐயாசாமி மலை அடிவாரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காட்டு யானை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனை பிடித்து சிகிச்சை அளிக்க கும்கி யானை பாரியுடன் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட காட்டு யானை, கடந்த சில தினங்களாக தீத்திபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் நுழைந்து கால்நடைகளையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதன் தாக்குதலால் தற்போது வரை மூன்று மாடுகள், ஒரு ஆடு காயம் அடைந்துள்ளது. மேலும், ஒரு கன்றுக்குட்டி பலியாகியுள்ளது. தொடர்ந்து இந்த காட்டு யானையால் மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.
புதனன்று, இந்த யானை கோவைப்புதூரில் அமைந்துள்ள பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கீட்டு இடத்தில் சுற்றித்திரிந்துள்ளது.
எனவே, இந்த யானையை பிடிக்கும் முயற்சியில் கால்நடை மருத்துவர் என்.எஸ்.மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் கும்கி யானையான பாரியின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது ஐயாசாமி மலையடிவாரத்தில் சுற்றித்திரியும் இந்த காட்டு யானைக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. செய்வதறியாது இந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தியும், வளர்ப்பு கால்நடைகளை தாக்கியும் வருகிறது. இந்த யானையை பிடித்து மாற்று இடத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படவுள்ளது" என்றனர்.