மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணிக்கான முதல்நிலை தேர்வு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வரும் ஜூன் 18ம் தேதியன்று முற்பகல் (9.30 முதல் 11.30 வரை) மற்றும் பிற்பகல் (2.30 முதல் 4.30 வரை) என இரு வேளைகளாக குடிமைப்பணி முதல்நிலை போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,



கோவை மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்துக்கொள்ள, முறையாக தேர்வுகளை நடத்திட மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கண்கானிப்பு அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இத்தேர்விற்காக துணை ஆட்சியர் நிலையில் மொபைல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு மையத்திற்கும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இத்தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் உக்கடம், காந்திபுரம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் போதுமான தளவாடங்கள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், காவல் துணை ஆணையர் துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...