தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி- காஷ்மீர் வரை புல்லட் பயணம் கோவையில் துவக்கம்

தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி- காஷ்மீர் வரையிலான புல்லட் பயணத்தினை பைக்ரைடர்ஸ் கிளப்பை சார்ந்த மூன்றுபேர் கோவையிலிருந்து துவங்கினர்.



கோவை பைக்ரடைர்ஸ் கிளப்பைச் சார்ந்த கவிசன், கார்த்திக், சந்தீப் ஆகிய மூன்றுபேர் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த கோவையிலிருந்து புல்லட்டில் கன்னியாகுமரிக்கு இன்று புறப்பட்டுச் சென்றனர். கன்னியாகுமரியிலிருந்து  ஸ்டீபன் அஜய் இவர்களோடு இணைந்து காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், 45 நாட்கள் சாலை மார்க்கமாக செல்லும்போது அன்றாட வாழ்வில் வீடு, அலுவலகம், வணிக வளாகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் மேலாண்மை பற்றியும், சேமிப்பு பற்றியும் வலியுறுத்தி இப்பயணத்தை மேற்கொள்கின்றனர்.



சுமார், பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த பயணத்தின் போது பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிறுவனங்கள், பொது இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள், தூண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இப்பயணத்திற்காக, கல்லூரி மாணவர் மற்றும் தொழிலாதிபர்கள் இணைந்து நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்ல இருப்பதாக இப்பயணம் மேற்கொள்வோர் தெரிவித்தனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...