குடிசை மாற்று வாரியம் சார்பில் வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதி மக்களுக்கு குலுக்கல் முறையில் வீடு

கோவை மாநகரத்தில், குளம் மற்றும் நீர்வழித்தட புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வாழ்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் மாநகரத்தில் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், கோவையில் உக்கடம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, வெள்ளலூர் குறிச்சி மலை, கோவைபுதூர் அண்ணாநகர், மலைநகர் ஆகிய இடங்களில், எட்டாயிரத்துக்கும் அதிகமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. குறிச்சி குளம், வெள்ளலூர் ராஜவாய்க்கால், சங்கனூர் பள்ளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து வசிக்கும் மக்களுக்கு மே 3 ஆம் தேதியன்று (நாளை) குலுக்கல் முறையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் ஒத்துக்கப்படுகின்றன.

அதன்படி, ஆக்கிரமிப்பாளர்கள் கணக்கெடுக்கப்பட்டு குடிசை மாற்று வாரியம் மூலமாக, வெள்ளலூரில் 2,186, மலுமிச்சம்பட்டியில் 1,460, மதுக்கரை அண்ணாநகர் 960, மலைநகரில் 224 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.

இதில் முதற்கட்டமாக வெள்ளலூர் ராஜவாய்க்கால் பகுதியை ஆக்கிரமித்து வசிக்கும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் கணக்கெடுக்கப்பட்டு மொத்தம் 1,750 பேர் வசிப்பது உறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு நாளை (மே 3) குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கப்படும். அடுத்தகட்டமாக மற்ற நீர்நிலைகள் மற்றும் குளங்களை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கும் வீடுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...