கோவையில் 17-வது இன்டெக் தொழிற்கண்காட்சி துவக்கம்

சர்வதேச அளவில் தொழில்துறையினருக்கான இயந்திரம் மற்றும் பொறியியல் உதிரிபாகங்கள் கண்காட்சியான 17-வது இன்டெக் தொழிற்கண்காட்சி கோவையில் துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நவீன இயந்திரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.



கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதிபாய் சௌத்ரி துவங்கி வைத்தார். அவருடன், மாநில அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சம்பத், பெஞ்சமின் மற்றும் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷணன் உட்பட மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் ஆணையர்கள், செயலாளர்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.



வருகிற 5-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியா மட்டுமின்றி, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, தைவான், சீனா, சிங்கப்பூர், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



குறிப்பாக இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகளில் மனிதர்களுக்கு பதில் பணியாற்றும் வகையிலான ரோபோ, கனரக இயந்தியங்களை தூக்கும் மின் தூக்கி, இயந்திர உதிரி பாகங்களை வடிவமைக்கும் இயந்திரங்கள் மற்றும் உயரமான இடத்தில் பணியாற்றும் வகையிலான நவீன லிஃட் இயந்திரங்கள் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.



இதேபோல் நவீன ரக சி.என்.சி.லேத் இயந்திரம், மர இழப்பு நிறுவனங்களுக்கான கருவிகள் மற்றும் இயந்திர உதிரிபாகங்கள், லேசர் கட்டிங் இயந்திரங்கள், ஹேண்ட் டூல்ஸ், ஏர் கம்பரசர்கள், பியரிங்ஸ், காஸ்டிங், இன்ஜின், ஜெனரேட்டர்கள், ஆல்டர்னேட்டர்ஸ், பவுண்டரி உபகரணங்கள் உட்பட துறை சார்ந்த பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



இந்த கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் எனவும், 600 கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வணிகர்களுக்கு, காலை, 10 மணி முதல், பிற்பகல் 3 மணி வரையும், பொதுமக்களுக்கு, 3 மணி முதல், மாலை, 6.30 வரையும் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. ஜூன், 4 ஆம் தேதி மாலை, 6 மணிக்கு, கண்காட்சியில் சிறப்பாக உள்ள நிறுவனங்கள் மற்றும் காட்சிப்படுத்தப்படும் பொருட்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...