இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை தொடர்பாக நீதி கேட்டு கோவையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதி கேட்டு கோவையில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் சசி குமார் கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை முக்கிய குற்றவாளிகளை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்யவில்லை.

எனவே, சசிகுமார் கொலை வழக்கிற்கு நீதி கேட்டு இந்து முன்னணி சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் அதிமுக இரு அணிகளும் மோதிக்கொண்டு இருப்பதாகவும், அதனால் சட்ட ஒழுங்கு சீராக இல்லை எனவும் அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பரணியம் குற்றம்சாட்டினார். மேலும், தற்போது இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், சிபிஐ-க்கு சசிகுமார் கொலை வழக்கை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.



சசிகுமார் கொலை வழக்கிற்கு நீதி கேட்டு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்து முன்னணியினரால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...