எதிர்வரக்கூடிய 2017-ம் ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கான (ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலுள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணிணி கட்டமைப்பைக் கொண்டு 2017-ம் ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் 60 சதவிகித வாய்ப்பிற்கான மழையளவு கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு அறுபத்தி ஐந்து சதவிகித மாவட்டங்களில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவகாலத்தில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, சென்னை, ஈரோடு, கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், மற்றும் சிவகங்கை மாவட்டங்கள்.
தென்மேற்கு பருவகாலத்தில் சராசரி மழையளவைக் காட்டிலும் குறைவான மழை எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்
இராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள்.
சராசரி மழையளவைகாட்டிலும் குறைவான மழை எதிர்பார்க்கப்படும் இடங்களில் பாசன நீர் அளவை பொறுத்து பயிர் சாகுபடி செய்யலாம். மேலும், பெறப்படும் மழையை தகுந்த நீர் சேகரிப்பு மேலாண்மையை கையாண்டு பயன் பெறவும்" என கோவை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.