பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனம் சார்பில் "வர்ணம் 2017"

கோவையில் செயல்பட்டு வரும் பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனம் சார்பில் "வர்ணம் 2017" என்னும் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளும் பங்கேற்றனர்.



இந்நிகழ்வில் பாரதிய வித்யா பவன் பள்ளி தலைமை ஆசிரியர் சரோஜா பங்கேற்று துவக்கவுரையாற்றினார். இதனைத் தொடந்து, ரேடியோ சிட்டி எஃப்.எம்-யின் புகழ் டோங்கிரி டேவிட் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, குழந்தைகளின் தன்னம்பிக்கை குறித்த தலைப்பில் விஜய் டிவி நியா- நானா புகழ்பெற்ற கோபிநாத் உரையாற்றினார்.

வர்ணம் 2017 நிகழ்ச்சியின் முக்கிய குறிக்கோளே சமூக அக்கரை மற்றும் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவது ஆகும். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமைந்தது.



இந்நிகழ்ச்சியில், பிர்லியன்ட் குரூப் ஆப் கல்வி நிறுவனத்தின் பொருளாளர் ராம் கிஷோர், செயலாளர் ஜானகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, வர்ணம் 2017 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...