நிலையான ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே தங்கள் எண்ணம் - முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன்


அதிமுக கட்சியை யாராலும் இயக்க முடியாது எனவும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி்.எஸ் இருவரையும் பா.ஜ.க நேரடியாகவோ மறைமுகமாகவோ இயக்க முடியாது என அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக புரட்சிதலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கை என தெரிவித்தார். சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைக்கு சென்று பார்ப்பது இன்னமும் தொடர்கின்றது என குற்றம்சாட்டினார். 

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஓ.பி்.எஸ் டிவிட்டர் தகவல் தவறாக பதிவிடப்பட்டது எனவும் தற்போது அந்த பதிவு சரி செய்யப்பட்டதாகவும் பாண்டியராஜன் தெரிவித்தார். சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டில் தங்கள் அணி உறுதியாக இருப்பதாகவும், நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக பேச்சுவார்த்தை துவங்கும் எனவும் இரு அணிகள் தரப்பிலும் ஆரோக்கியமான வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றது எனவும் பேச்சுவார்த்தைக்கு அமைக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், வலிமையான நிலையான ஆட்சி அமைக்கவேண்டும் என்பதே தங்கள் எண்ணம் என தெரிவித்தார். ரஜினி அரசியல் வருகை என்பது வரவேற்க வேண்டியது என கூறியவர் ரஜினி நல்ல மனிதர் எனவும் தெரிவித்தார். அதிமுகவை பா.ஜ.க நேரடியாகவே இயக்கும் என பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா சொன்ன கருத்து தொடர்பான கேள்விக்கு, அதிமுக கட்சியை யாராலும் இயக்க முடியாது எனவும், எடப்பாடி பழனிசாமி - ஓ.பி்எஸ் இருவரையும் பா.ஜ.க நேரடியாகவோ மறைமுகமாகவோ இயக்க முடியாது என்றார். 11ம் வகுப்புக்கு பொதுதேர்வு என்பது வரவேற்கதக்க நடவடிக்கை என பாராட்டியவர் அமைச்சர் செங்கோட்டையன் செய்படுத்திய கிரேடு முறை திட்டம் அருமையான திட்டம் எனவும் கடந்த 3 மாதங்களாக பள்ளிகல்வி துறை சிறப்பாக செயல்படுகின்றது எனவும் பாராட்டினார். தவறை சுட்டிகாட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிகாட்டியும் விமரசிக்க வேண்டிய நேரத்தில் விமர்சனம் செய்து கொண்டு இருக்கின்றோம் என்றவர் பள்ளிகளில் அம்மா கிட்ஸ் உபகரணங்களை உடனடியாக வழங்கப்பட்டால் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு இணையாக மாநில பாடதிட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...