காவிரி பிரச்சினை குறித்து பேசியதற்காக சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை என அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆட்சியை விமர்சனம் செய்யும் அளவிற்கு ரஜினி பேசியதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி இதனை தெரிவித்தார். மேலும் இரு அணிகள் இணைப்பிற்கான குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது எனவும் இரட்டை இலை மீட்கவேண்டும் என்பதே தங்கள் லட்சியம் எனவும் கூறினார். காவிரி பிரச்சினையில் சத்யராஜ் படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை என கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய ஆட்சியை பற்றி விமர்சிக்கும் படி ரஜினி பேசுவது சரியல்ல எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் தன்னை விமர்சனம் செய்தவர்களை பற்றி பாராட்டி பேசிய ரஜினி, ஆட்சியை விமர்சிக்கும் படி பேசி இருப்பதாகவும் தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாகவும் குறிப்பிட்ட அவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு நன்றாக இருப்பதற்கு சட்டம் ஓழுங்கு நன்றாக இருப்பதே காரணம் எனவும் நடிகர்கள் பேசும் போது பார்த்து பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.