கோவையில் 10 மூட்டை போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவை இடையர் வீதியில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்ததாக மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அச்சுதராஜன் (48), புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரதீப் (28) ஆகியோரை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் கைது செய்தனர். இவர்களின் தகவலின் பேரில் போத்தனூர் குடோன் மற்றும் ஒத்தக்கால்மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ், கூல்-லிப், விமல், கணேஷ், வி1 புகையிலை உள்ளிட்ட 10 மூட்டை தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான ராமச்சந்திரன், மகேந்திரன் ஆகியோருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். இதேபோல் சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் தேவகோட்டையைச் சேர்ந்த மதன் (21) என்பவரும் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: கோவையில் பெருமளவிலான குட்கா, புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான இருவருக்கு வலைவீச்சு நடத்தி வருகின்றனர்.

கோவை இடையர் வீதியில் போதைப் பொருட்கள் பதுக்கி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அச்சுதராஜன் (48), புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரதீப் (28) ஆகியோர் பிடிபட்டனர்.

அச்சுதராஜன் மற்றும் பிரதீப் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். இதில் போத்தனூர் குடோன் மற்றும் ஒத்தக்கால்மண்டபத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 மூட்டை ஹான்ஸ், கூல்-லிப், விமல், கணேஷ், வி1 புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கூண்டோடு பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்குடன் தொடர்புடைய தலைமறைவான ராமச்சந்திரன், மகேந்திரன் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதேபோன்று சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் பெட்டிக்கடை அருகே கூல்-லிப் மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி விற்ற தேவகோட்டையைச் சேர்ந்த மதன் (21) என்பவரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தப்பியோடிய விக்னேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செப்டம்பர் 30-க்குள் செலுத்த அறிவிப்பு

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2026-2027 முதல் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்க...

கோவையில் 10 மூட்டை போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது

கோவை இடையர் வீதியில் போதைப்பொருள் பதுக்கி விற்பனை செய்ததாக மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த அச்சுதராஜன் (48), புதுக்கோட்டையைச...

இங்கிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: கோவையில் தம்பதி உள்பட மூவர் மீது வழக்குப்பதிவு

கோவை காந்திபுரம் புதிய சித்தாபுதூரை சேர்ந்த அரவிந்த்குமார், அவரது மனைவி யுகன்யா வின்சென்ட் மற்றும் அவர்களது நண்பர் தங்க...

கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே 'தூய்மையே சேவை 2026' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கணியூர் ஊராட்சி மற்றும...