கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வச்சதா ஹீ சேவா 2026) நிகழ்வின் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. மாணவர்கள் இந்திய வரைபட வடிவில் அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி வழிகாட்டுதலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் லட்சுமணன் தலைமையில் மாணவ மாணவியர் தூய்மை இந்தியா-26 உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.


Coimbatore: கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை எவ்வாறு தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கணியூர், கோயம்புத்தூர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கோவை மாவட்டம், தமிழ்நாடு ஆகியவை இணைந்து SHS 26 (ஸ்வச்சதா ஹீ சேவா 2026) நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.



இந்நிகழ்ச்சியில் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் இந்திய வரைபட வடிவில் அணிவகுத்து கலந்து கொண்டு பிளாஸ்டிக் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி அவர்களின் வழிகாட்டுதலில், இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் APO இன்ஃப்ரா 2 அப்துல் வஹாப், சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், கணியூர் ஊராட்சி செயலாளர் மங்கலம் சத்யா, E.O ஜெகதீசன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.



மேலும், கல்லூரி முதல்வர் டாக்டர் லட்சுமணன் தலைமையில் மாணவ மாணவியர் இணைந்து தூய்மை இந்தியா-26 உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...