கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வார்டு எண்.19-க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம், நல்லாம்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளுக்கு குடிநீர் விநியோக இடைவெளியை குறைக்கவும், வார்டு எண்.30 சித்தா தோட்டப் பகுதியில் அடைப்பு நீக்கவும், வார்டு எண்.28 ஆவாரம்பாளையம், சோபா நகர், பட்டாளம்மன் கோவில் வீதியில் வடிகால் சரிசெய்யவும் அறிவுறுத்தினார். வார்டு எண்.27 பன்னாரியம்மன் கோவில் வீதியில் புதிய வடிகால் திட்டம் தயாரிக்கவும் உத்தரவிட்டார்.
Coimbatore: கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., இன்று (23.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.19-க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள நல்லாம்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு, குடிநீர் விநியோகத்தின் இடைவெளியை குறைப்பது தொடர்பாக ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, ரவி தேஜா, வடக்கு மண்டலம், வார்டு எண்.30-க்கு உட்பட்ட சித்தா தோட்டப் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதையும் கண்டறிந்தார். மேலும், வார்டு எண்.28-க்கு உட்பட்ட ஆவாரம்பாளையம், சோபா நகர், பட்டாளம்மன் கோவில் வீதி பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் தடையின்றி நீர் செல்லும் வகையில் சரிசெய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், ரவி தேஜா, வார்டு எண்.27-க்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பிரதான சாலை, பன்னாரியம்மன் கோவில் வீதி பகுதியில், மழைநீர் வடிகால் அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், உதவி ஆணையர் மோகனசுந்தரி, செயற்பொறியாளர் தேவதாஸ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பட்டன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, சத்தியமூர்த்தி (பொ), மாமன்ற உறுப்பினர்கள் சரண்யா, கண்ணகிஜோதிபாசு, அம்பிகாதனபால், மண்டல சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர் ராஜேஸ்வேணுகோபால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.