எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார். அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதங்களுக்குள் முடித்து, அதன் முடிவை தமிழக அரசுக்கு தெரிவிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான விஜய கார்த்திகேயன் மற்றும் கந்தசாமிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரிய விவகாரத்தில், மத்திய அரசுக்கு தேவையான விளக்கங்களுடன் கடந்த ஜூலை 22ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, காணொலி காட்சி மூலம் ஆஜரான மத்திய அரசின் பணியாளர் துறை இணைச் செயலாளர் சுஷீல் குமார் பாட்டீலிடம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் ஏற்பட்டுள்ளது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு அதிகாரி, வழக்கு தொடர்பாக அதிக அளவிலான ஆவணங்கள் இருப்பதால் அவற்றை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்தார். மேலும், ஆவணங்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் கருத்து அடுத்த வாரம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் விளக்கமளித்தார்.

அதன்பின்னர் ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் என்றும், வழக்குத் தொடர அனுமதி வழங்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்திடம் இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த நடைமுறைகளை நிறைவு செய்ய இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்றும், மேலும் காலதாமதம் ஏற்படாது என்றும் உறுதியளித்தார்.

மத்திய அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2025 நவம்பர் முதல் இதுவரை அனுமதி வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதங்களுக்குள் முடித்து, அதன் முடிவை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...