கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்றி கிடந்த 74 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் திருடப்பட்டவையா அல்லது குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டவையா என விசாரணை நடக்கிறது.
Coimbatore: கோவை மாநகரின் சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமையின்றி நின்ற 74 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த இந்த வாகனங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தெருக்கள் மற்றும் சந்துகளில் பல இருசக்கர வாகனங்கள் உரிமையாளர்கள் இன்றி சந்தேகத்திற்கிடமான முறையில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சிங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு தலைமையிலான போலீஸ் குழு தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த சோதனையில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெருக்களிலும் சந்துகளிலும் கேட்பாரற்று நின்ற 74 இருசக்கர வாகனங்களை போலீசார் கண்டறிந்தனர். இந்த வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு சிங்காநல்லூர் காவல் நிலைய வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட 74 இருசக்கர வாகனங்களுக்கும் இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து உரிமை கோரப்படாத சொத்துக்கள் பிரிவின் கீழ் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அர்ஜுன்குமார் வழக்கு பதிவு செய்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த வாகனங்கள் திருடப்பட்டவையா அல்லது குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டு பின்னர் வீசி எறியப்பட்டவையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வாகனத்தின் பதிவு எண்ணையும் சரிபார்த்து அதன் உரிமையாளர்களை கண்டறியும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை சிங்காநல்லூர் பகுதியில் வாகன திருட்டு மற்றும் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.