பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடிய நகைகளை விற்று, காதலனுக்காக பைக் வாங்கிக்கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாய் பிரின்சி (19). இவர் பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி, ஊஞ்சவேலம்பட்டி அருகே வசிக்கும் குடும்ப நண்பரான தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டிற்கு ஜாய் பிரின்சி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகைகளை அவர் திருடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நகைகள் காணாமல் போனது குறித்து தமிழ்ச்செல்வன் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது வீட்டிற்கு ஜாய் பிரின்சி வந்து சென்ற பின்னர் நகைகள் காணாமல் போனதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தங்க நகைகளை தான் திருடியதாக ஜாய் பிரின்சி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், திருடிய நகைகளை பொள்ளாச்சியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்ததாகவும் மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், நகைகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தில் தனது காதலனுக்காக KTM பைக் வாங்கிக் கொடுத்ததாகவும் மாணவி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புதிய பைக்குடன் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் மாணவி மீது மட்டுமே திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது காதலன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், காதலனின் அடையாளத்தை வெளியிடாமல் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து ஜாய் பிரின்சியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...