கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததைப் போல, சட்டப்பேரவையில் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பது குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது அவசியம் எனவும் தேவையற்ற வார்த்தை ஜாலங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.
கோவை:
சட்டப்பேரவையில் தேவையற்ற வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிப்பதைத் தவிர்த்து, தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததைப் போல, சட்டப்பேரவையில் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பது குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது அவசியம் எனவும்தேவையற்ற வார்த்தை ஜாலங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம் தொடர்பாக தற்போது நிலத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், இந்த ஆய்வுகள் நிறைவடைந்த பின்னரே வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்பதால், நிவாரணத் தொகை செப்டம்பர் மாதத்திற்குப் பிறகே வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர், நிதிச்சுமை இருந்தாலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை தன்னலம் கருதாமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் சிறப்பாகப் பணியாற்ற கார் மற்றும் உதவியாளர்கள் அவசியம் என்றும் தெரிவித்தார்.
நகராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்களுக்கும் வாகனங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், முந்தைய திமுக ஆட்சியிலும் இதுபோன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
திமுகவால் இதுபோன்ற வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததால், எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் விவகாரத்தை தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
மூன்று கோப்புகள் நிலுவையில் இருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அந்தக் கோப்புகளை சட்டத்தின் அடிப்படையில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றார். கோப்புகளில் இடம்பெற்றுள்ள விவரங்களை முழுமையாகப் பரிசீலித்த பின்னரே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், மேகதாது விவகாரத்தில் ஒரு செங்கலைக்கூட வைக்க முடியாது என திட்டவட்டமாகக் கூறினார்.