கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் தொடர் கொலைகள், கொள்ளைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி கோவையில்நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி, “போதை ஒழிப்பு எங்கள் உறுதி!” மற்றும் “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்!” என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கரை ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினர்.
இதில், கோவை மாவட்டத்தின் பல்வேறு நிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று சமூகப் பாதுகாப்பை வலியுறுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.