தமிழகத்தில் 14 புதிய பேருந்து நிலையம் அமைக்க நிதி கோரி மத்திய அமைச்சரிடம் மாநில அமைச்சர் மனு

தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதுதில்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி-யிடம் தமிழ்நாட்டில் 14 புதிய பேருந்து நிலையங்கள் அமைத்திட ரூ.736 கோடியே 64 லட்சம் வழங்க வேண்டி கோரிக்கை மனுவினை அளித்தார்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு சாலைப் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகின்றது. தொழில் வளர்ச்சி காரணமாக நகர்மயமாகுவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதனால், கிராமப்புறத்தில் இருந்து நகரங்களில் குடியேறுவதும் மக்கள் தொகை பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது இன்றியமையாததாகும்.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 18 சிறப்பு நிலை நகராட்சிகள், 28 தேர்வுநிலை நகராட்சிகள், 34 முதல்நிலை நகராட்சிகள் மற்றும் 44 இரண்டாம் நிலை நகராட்சிகள் என மொத்தம் 124 நகராட்சிகள் உள்ளன. நகரமயமாகுதல் காரணமாக ஒவ்வொரு நகரத்திலும் குறைந்தபட்சம் ஒரு பேருந்து நிலையமாவது இருப்பது அவசியமாகும். மொத்தமுள்ள 124 நகராட்சிகளில் 112 நகராட்சிகளில் பேருந்து நிலைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலம், தமிழ்நாட்டில் கோவை மாநகராட்சியில் ரூ.202.80 கோடி உள்ளிட்டு திருச்சி, மதுரை, வேலூர், ஈரோடு, திருநெல்வேலி, தஞ்சாவூர் என மொத்தம் 7 மாநகராட்சிகளில் ரூ.545.04 கோடி மதிப்பீட்டிலும் மயிலாடுதுறை, திண்டிவனம், கரூர் உள்ளிட்டு 7 நகராட்சிகளில் 191.60 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க கருத்துரு தயார் செய்யப்பட்டுள்ளது. 

ஆக மொத்தம் 14 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் ஏற்படுத்திட ரூ.736 கோடியே 64 லட்சம் மானியமாக வழங்கிட வேண்டி கோரிக்கை மனுவினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி-யிடம் அளித்தார்.

இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர் பி.வேணுகோபால், நகராட்சி நிர்வாக ஆணையர் ஜி.பிரகாஷ், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுரை ஆணையர் என்.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...