கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட மற்றொரு குற்றவாளியான மாதேஷ், கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை:கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே 22 வயதான இளைஞர் அஸ்வினை கொடூரமாகக் கொலை செய்து, அந்தச் சம்பவத்தை செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். மற்றொரு குற்றவாளியான மாதேஷ், போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கீழே குதித்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையம் சக்தி நகரைச் சேர்ந்த அஸ்வின் (22), கடந்த 6-ஆம் தேதி நள்ளிரவு தனது நண்பரின் அறையில் தங்கி இருந்தபோது கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து அஸ்வினின் தாயார் அளித்த புகாரின் பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் கொலையில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று அஸ்வின், தனது நண்பர்களான மாதேஷ் மற்றும் 17 வயது சிறுவனை மது வாங்கி வருமாறு கூறியதாகவும், அவர்கள் மது வாங்காமல் திரும்பியதால் ஆத்திரமடைந்த அஸ்வின், இருவரையும் கடுமையாகத் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும், அஸ்வின் தூங்கிக் கொண்டிருந்தபோது சுத்தியலால் அவரது மார்பு மற்றும் தலையில் தாக்கியும், கழுத்தில் கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், கொடூரத் தாக்குதலை செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து, தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், இருவரும் திருப்பூர், ஈரோடு, பழனி உள்ளிட்ட பகுதிகளில் தலைமறைவாக இருந்துவிட்டு பொள்ளாச்சிக்குத் திரும்பி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவர்களைத் துரத்திச் சென்று, கிணத்துக்கடவு அருகே கோடங்கிபாளையம் ரயில்வே பாலம் பகுதியில் பதுங்கியிருந்தபோது மடக்கிப் பிடித்தனர். அப்போது மாதேஷைப் பிடிக்க போலீசார் முயன்றபோது, அவர் பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

போலீசார் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் மாதேஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் கோவை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்களை மிரட்டியதாகப் புகார்: 10 தவெகவினர் மீது வழக்குப்பதிவு

செப் 24-ஆம் தேதி, தவெகவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட 10 பேர், வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ஆய்வு நடத்...

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...