கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாகக் கூறப்படும் மாதேஷ் (22) மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின்போது தப்பிக்க முயன்ற மாதேஷுக்கு கை முறிவு ஏற்பட்டதால், அவருக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை:கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளியை கொடூரமாகக் கொலை செய்து, அந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வழக்கில், மாதேஷ் (22) மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின்போது தப்பிக்க முயன்ற மாதேஷ் கீழே விழுந்ததில் அவரது கையில் முறிவு ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த அஸ்வின் (22), கல் உடைக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும், நண்பர்களான மாதேஷ் (22), விஷ்ணு (19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோருக்கும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், 16 வயது சிறுவனை பள்ளிக்குச் செல்ல விடாமல் மது அருந்த வைத்ததாகக் கூறி அஸ்வினுக்கும் மற்றவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு அஸ்வின், தனது நண்பர் விஷ்ணுவின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர், சுத்தியல் மற்றும் அரிவாளால் அஸ்வினை சரமாரியாக தாக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொலையைத் தொடர்ந்து, சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததுடன், உயிரிழந்த அஸ்வினுடன் செல்பி எடுத்தும், அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார், அஸ்வினின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 15 போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோடங்கிபாளையம் ரயில்வே பாலம் அருகே பதுங்கியிருந்த மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

கைது நடவடிக்கையின்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற மாதேஷ் கீழே விழுந்ததில் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின்னர் போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.



இந்த சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்களை மிரட்டியதாகப் புகார்: 10 தவெகவினர் மீது வழக்குப்பதிவு

செப் 24-ஆம் தேதி, தவெகவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட 10 பேர், வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ஆய்வு நடத்...

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...