கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் அவரை ஆயுதங்களில் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் அவரை அரிவாள் போன்ற ஆயுதங்களில் தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22), புதன்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் தனது வீட்டில் கழுத்தில் கத்திக்குத்து மற்றும் உடலில் பல்வேறு வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார், அஸ்வினின் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்ததடயவியல் நிபுணர்கள், ரத்த மாதிரிகள், ஆயுத தடயங்கள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்தனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மேலும், கொலையில் ஈடுபட்ட நபர்கள் கொலையை வீடியோ பதிவாக இணையத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்களை மிரட்டியதாகப் புகார்: 10 தவெகவினர் மீது வழக்குப்பதிவு

செப் 24-ஆம் தேதி, தவெகவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட 10 பேர், வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி ஆய்வு நடத்...

கோவையில் வரசித்தி விநாயகர் கோவில் 4ம் ஆண்டு விழா மற்றும் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வர சித்தி விநாயகர் திருக்கோவில் நான்காம் ஆண்டு விழா மற்றும் அருள்மிகு வள்ளி தெய்வா...

கோவை காந்திபுரத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூல்: குத்தகைதாரருக்கு ரூ.25,000 அபராதம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68 காந்திபுரம், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம்...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...