ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 13.09.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடத்திய தேசிய அளவிலான 24 மணிநேர ஹேக்கத்தான் போட்டியில் 16 மாநிலங்களைச் சேர்ந்த 37 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பதிவு செய்தனர். தகுதி பெற்ற 77 அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. கிழக்கு மண்டலப் பிரிவில் ஒடிசா ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழகம் முதல் பரிசு பெற்றது. நிறைவு விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.


Coimbatore: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான 24 மணிநேர ஹேக்கத்தான் போட்டியானது 12.09.2026 (சனிக்கிழமை) மற்றும் 13.09.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் மற்றும் ஐபிஎம் நிறுவன இந்திய மேலாளர் ஜெகதிஷா பட் ஆகியோர் ஹேக்கத்தான் போட்டியினைத் தொடங்கி வைத்தனர்.



13.09.2026 அன்று மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொறியியல் மற்றும் கலை அறிவியல் பிரிவுகளில் 37 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பதிவு செய்தனர். இவர்களுள் தகுதி வாய்ந்த 77 அணிகள் மட்டுமே இறுதிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.



இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, கிழக்கு மண்டலப் பிரிவில் முதல் பரிசினை ஒடிசா, ஸ்ரீ ஸ்ரீ பல்கலைக்கழகமும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசினை ஜார்கண்ட், ஆர்கா ஜெயின் பல்கலைக்கழகமும், நான்காம் பரிசினை மேற்கு வங்காளம், பிரைன்வேர் பல்கலைக்கழகமும், ஐந்தாம் பரிசினை ராஞ்சி, சரளா பிா்லா பல்கலைக்கழகமும் பெற்றன.

வெற்றி பெற்ற கல்வி நிறுவனங்களைச் சார்ந்த போட்டியாளர்களுக்குச் சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டன.



நிகழ்வில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். நிகழ்ச்சியினை கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் ஜி.மரிய பிரிசில்லா, தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் முனைவர் என்.சுமதி, கணினிப் புலப் பேராசிரியர்கள் மற்றும் ஐபிஎம் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...