கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ₹12,200 பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் வருவாய்கள் மற்றும் அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, கோவையில் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் ADSP ராஜேஷ் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் ஒன்பது போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் காரணமாக மத்திய மண்டல அலுவலக நுழைவாயில் பூட்டு போட்டு பூட்டப்பட்டது.



சோதனையின் முடிவில், m கணக்கில் வராத ₹12,200 பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட தகவலின்படி, தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த சோதனையில் மொத்தமாக ₹31,27,110 ரொக்கப் பணமும், GPay பரிவர்த்தனைகள் மூலம் ₹26,70,990-மும் கண்டறியப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத பணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...