கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட்டி மற்றும் கழிப்பிடங்களை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


Coimbatore:

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூடலூர் நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் கள ஆய்வு மேற்கொண்டார்.



கூடலூர் நகராட்சிக்குட்பட்ட செல்வபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, பள்ளியில் பயன்பாட்டில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதமடைந்து, இரும்புக் கம்பிகள் வெளிப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைக்க நகராட்சி ஆணையர் மூவேந்திரனுக்கு எம்எல்ஏ சுனில் ஆனந்த் உத்தரவிட்டார்.

தொடர்ந்து திருமலை நாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அவர், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி சேதமடைந்திருந்ததை பார்வையிட்டு, அவற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது 6-வது வார்டு விஜயா நகர் பகுதி பொதுமக்கள், சாலை வசதி ஏற்படுத்தித் தருமாறு எம்எல்ஏவிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சுனில் ஆனந்த், விரைவில் சாலை அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்த ஆய்வின் போது தமிழக வெற்றிக் கழக கூடலூர் நகரச் செயலாளர் சத்யகுமார், நகர நிர்வாகிகள் சரவணன், ஷகிலா, பூர்ணிமா, விஜய், விக்னேஷ், வெங்கடேஷ், கவுசிக், மவுரி, அஜித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...