கோவையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் திருவிழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கத்தி போடும் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை என 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கத்திப்போடும் நிகழ்பில் பங்கேற்றனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: நரசிம்மநாயக்கன்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய கத்தி போடும் திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்து, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கத்தி போடும் நிகழ்வில் பங்கேற்றனர்.

விழாவையொட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் “வீசுக்கோ… தீசுக்கோ…” என்ற கோஷங்களை முழங்கியவாறு அம்மனை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வந்தனர். இந்த ஊர்வலத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது கைகள், மார்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் கத்திகளால் காயப்படுத்திக் கொண்டு பக்தியை வெளிப்படுத்தினர். ரத்தம் சொட்டச் சொட்ட பக்தர்கள் அம்மனை வழிபட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாரம்பரிய திருவிழா நடைபெற்றதால், பக்தர்களிடையே மிகுந்த உற்சாகமும் ஆர்வமும் நிலவியது. விழாவின் நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சவுடேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த பாரம்பரிய திருவிழா தலைமுறை தலைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளை பிரதிபலிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...