சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன்ராஜ் மற்றும் கார்த்தி என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனேவே மோகன்ராஜுக்கு நீதிமன்ற காவல் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இன்று கார்த்திக்கு ஜூன் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று மாலை காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற கார்த்தி, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தபோது வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்த,கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






இந்த நிலையில், மருத்துவமனையில், சூலூர் குற்றவியல் நீதிமன்ற POCSO வழக்குகள் நீதிபதி பகவதி அம்மாள் நேரில் சென்று வழக்கை விசாரித்தார். விசாரணைக்கு பிறகு, கார்த்தியை வருகிற ஜூன் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அவர்குணமடையும் வரை காவல்துறை பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான மோகன் இன்று காலை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கார்த்தி குணமடைந்த பின்னர் அவரும் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்படுவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...