கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வரை ஐந்து மண்டல அலுவலகங்களில் நடைபெறும். அடையாள அட்டை, ஆதார், வங்கி புத்தகத்துடன் கலந்துகொள்ளலாம் என ஆணையர் கட்டா ரவி தேஜா IAS அறிவித்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் செயல்படும் என மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS தெரிவித்துள்ளார்.


கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டல அலுவலகங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும். கிழக்கு மண்டலத்தில் கிழக்கு மண்டல அலுவலகம், சௌரிபாளையம் சமுதாயக் கூடம், காளப்பட்டி, உப்பிலிபாளையம், சேரன்மா நகர் ஆகிய பகுதிகளிலுள்ள வார்டு அலுவலகங்களில் முகாம் அமையும். மேற்கு மண்டலத்தில் மேற்கு மண்டல அலுவலகம், வடவள்ளி, கவுண்டம்பாளையம், வேலாண்டிபாளையம், அண்ணா மார்க்கெட் வார்டு அலுவலகங்களில் முகாம் நடைபெறும்.


தெற்கு மண்டலத்தில் தெற்கு மண்டல அலுவலகம், செல்வபுரம், போத்தனூர், குறிச்சி, கோவைப்புதூர் பகுதிகளிலுள்ள வார்டு அலுவலகங்களிலும், வடக்கு மண்டலத்தில் வடக்கு மண்டல அலுவலகம், ஆவாரம்பாளையம், காந்திமாநகர், சரவணம்பட்டி, துடியலூர் வார்டு அலுவலகங்களிலும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் பிரதான அலுவலகம், இராமநாதபுரம் சமுதாயக் கூடம், காந்திபுரம், சிவானந்தா காலனி, இரத்தினபுரி பகுதிகளிலுள்ள வார்டு அலுவலகங்களிலும் லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் நடைபெறும்.


சாலையோர வியாபாரிகள் தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்துகொண்டு வங்கி கடன் பெறலாம். உணவு தொடர்பான வணிகம் செய்யும் சாலையோர வியாபாரிகள் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் விழிப்புணர்வு பயிற்சி பெற்று உரிமம் பெறவும் வாய்ப்பளிக்கப்படும். மேலும் இணையம் மூலம் பணப் பரிவர்த்தனையில் இணைந்து கொள்ள இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆணையர் Katta Ravi Teja IAS தெரிவித்துள்ளார்.

Newsletter

Coimbatore Corporation Vaccinates Over 1,000 Stray Dogs Against Rabies in a Single Day

The Coimbatore City Municipal Corporation vaccinated over 1,000 community dogs during an intensive Anti-Rabies Vaccinati...

கோவையில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மேற்கு மாநகராட்சி சார்பில் செப்டம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தீவிர வெறிநோய் தடுப்பூசி (ARV) முகாமில் ஒரே நாளில் 10...

பெரியநாயக்கன்பாளையத்தில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் சிவாஜி காலனி அருகில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் சுமார...

கோவையில் (29.09.2026) மதுவிலக்கு வழக்கு வாகனங்கள் பொது ஏலம்

கோயம்புத்தூர் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர மற்றும் கனரக...

கோவையில் ஐந்து மண்டலங்களிலும் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' முகாம்கள்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ஐந்து வீதிகளில் 'டெங்கு விழிப்புணர்வு வீதி' என்ற தலைப்பில் இன்று (26.09.2026) விழ...

கோவை ராமநாதபுரத்தில் கேட்பாரற்று கிடந்த 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோவை ராமநாதபுரம் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் கேட்பாரற்று நின்ற 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்....