கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்கு பிறகு தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Coimbatore: தமிழ்நாட்டில் நடைபெற்ற 17வது சட்டமன்றத் தேர்தலில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட கனிமொழி சந்தோஷ், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 466 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.



இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற அவர், தவெக-வின் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிகழ்விலும் பங்கேற்றார். தற்போது, சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையத்தில் தொடங்கி சித்ரா, காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, துடியலூர், ஜி.என்.மில்ஸ், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், கணுவாய், தடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக பெரியநாயக்கன்பாளையம் வரை பொதுமக்களை சந்தித்து வாக்களித்ததற்காக நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், தனது வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் மற்றும் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், “கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் தேவைகளுக்காக சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என உறுதியளித்தார்.


Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...