“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதிவு செய்ததாக குற்றம்சாட்டி, குடும்பத்துடன் கோவை மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்.


Coimbatore: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இன்று பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் தெக்கலூரைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு கோவை கணியூர் பகுதியில் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலம் தொடர்பாக ராஜேந்திரன் என்பவருடன் நீண்டநாள் தகராறு இருந்து வரும் நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி ராஜேந்திரன் மற்றும் ராஜா ஆகியோர் 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் வந்து கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கு இருந்தவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், டி.வி.ஆர்., சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளித்தபோதும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், எதிர் தரப்பின் புகாரின் அடிப்படையில் தங்கள்மீதே வழக்குப் பதிவு செய்துள்ளதாக சித்ரா தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இதனிடையே, கடந்த 30ஆம் தேதி ஜமுனாதேவி என்பவரிடம் தகராறு செய்ததாக மீண்டும் தங்கள்மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினம் குடும்ப துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிலேயே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“வீட்டில் கருப்பு காரியம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் எவ்வாறு நிலத்திற்குச் சென்று தகராறு செய்ய முடியும்?” என கேள்வி எழுப்பிய அவர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என தெரிவித்தனர்.

தங்கள்மீது திட்டமிட்டு பொய் வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சித்ரா தனது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...