பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நேரில் ஆய்வு செய்து, பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள பவானி தடுப்பணையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனத்தின் சார்பில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோவை மாநகராட்சியின் பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தடையின்றி மற்றும் விரைவாக குடிநீர் வழங்கும் வகையில் பராமரிப்பு பணிகளை துரிதமாக நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.





இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் விஜயகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் பட்டன், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராம்சங்கர், உதவி செயற்பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, எழில், உதவி பொறியாளர்கள் ஜெயின்ராஜ், சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...