கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட்சமாக 69 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 181.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி சராசரியாக 7.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விரிவான விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், நகரப் பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஆனால் பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் மழை வெளுத்து வாங்கியது. நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.


பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட விவரப்படி, கோவை விமான நிலையம் சுற்றுவட்டார பகுதிகளில் 5.10 மில்லி மீட்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சுற்றுவட்டார பகுதிகளில் 15.20 மில்லி மீட்டர், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் 11.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 69 மில்லி மீட்டர், பில்லூர் அணைக்கட்டு பகுதியில் 10 மில்லி மீட்டர், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 33 மில்லி மீட்டர், சிறுவாணி அடிவாரத்தில் 24 மில்லி மீட்டர், மதுக்கரை தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 1.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


போத்தனூர் ரயில் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் 0.60 மில்லி மீட்டர், பொள்ளாச்சி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர், ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மில்லி மீட்டர், ஆழியாறு சுற்றுவட்டார பகுதிகளில் 1.20 மில்லி மீட்டர், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பகுதிகளில் 3 மில்லி மீட்டர், வால்பாறை தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லி மீட்டர் என பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.


இதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 181.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் நேற்று 7.90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....